உதயநிதியின் அக்கா கணவரிடம் இருந்து கோபித்துகொண்டு அம்மா வீட்டிற்கு வருகிறார். அவரை அவருடைய கணவருடன் சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க உதயநிதி கோவை செல்கிறார். அங்குதான் எதிர்வீட்டில் இருக்கும் நயன் தாராவை பார்க்கிறார். அதுவரை திருமணமே வேண்டாம் என்று ஆஞ்சநேயர் பக்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் உதயநிதி, நயன் தாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் நயன்தாரா வேறொருவனை காதலிக்கிறார். நயன்தாராவை காதலிப்பவன் தவறானவன் என்று உதயநிதிக்கு தெரிய வர, சந்தானத்தின் அதிரடி ஐடியாக்களோடு நயன்தாரா மனதை எப்படி கவர்கிறார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
முதல்பாதி வெகு சாதாரணமாக நகரும் திரைக்கதை, சந்தானம் வந்த பிறகு சூடு பிடிக்கிறது. அவர் கொடுக்கும் காதல் ஐடியா, வில்லனிடம் இருந்து நயன்தாராவை பிரிக்க அவர் எடுக்கும் முயற்சி என படம் முழுவதும் கலகலப்பூட்டுகிறார். இவர்தான் இந்த படத்தின் உண்மையான கதாநாயகன்,
ஒரு கல் ஒரு கண்ணாடி போல் வெறும் நகைச்சுவை நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் கொன்சம் சின்சியராக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நயன்தாராவுடன் காதலுடன் டயலாக் பேசுவது, அப்பாவிடம் காதலை எடுத்து கூறுவது என்று ஒரு சில காட்சிகளில் தேறுகிறார்.
நயன்தாரா எப்படி இந்த படத்திற்கு ஒப்புகொண்டார் என்றே தெரியவில்லை. அவருடைய கேரக்டர் குறித்து சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. சுந்தரபாண்டியன் படத்தில் இருந்த அழுத்தம், மெசேஜ் என்ற எதுவும் இந்த படத்தில் இல்லை. பிரபாகர் இந்த படத்தை வெறும் நகைச்சுவைக்காக எடுத்தால் போதும் என்று நினைத்துவிட்டார். பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் அருமை. ஹாரிஸ் ஜெயராஜ் அவருடைய வேலையை சரியாக செய்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
மொத்தத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ காதலர்களின் காதல் ….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி