முதலில் கடந்த மாதம் ‘தி டே ‘ படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, இந்த படத்தை வெளியிட யாருமே முன்வரவில்லை. பொதுவாக இந்தியில் வெளியான படங்களில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்திருந்தாலும், அதை அப்படியே தமிழில் டப் செய்தால் ஓடாது. இதற்கு சமீபத்திய உதாரணம் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை சொல்லலாம். இந்தியில் ராஞ்சனா நன்றாக ஓடினாலும், தமிழில் ஒரு வாரம் கூட ஓடவில்லை.
எனவேதான் தயாரிப்பாளரும், ஸ்ருதிஹாசனும் இணைந்து இந்த எதிர்ப்பு நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பேசிவைத்துதான் ஸ்ருதிஹாசன் வழக்கு தொடரப்போவதாக மிரட்டியுள்ளார் என்பது தற்போதுதான் பலருக்கு புரிந்துள்ளது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அதிக தியேட்டர்களும் புக் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும் இவர்களது நாடகம் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி