செய்திகள்,திரையுலகம் கோச்சடையான் ஆடியோ வெளியிடு தேதி மாற்றம்!…

கோச்சடையான் ஆடியோ வெளியிடு தேதி மாற்றம்!…

கோச்சடையான் ஆடியோ வெளியிடு தேதி மாற்றம்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் தேதியை திடீரென மாற்றியிருக்கிறது படக்குழு.

கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழா அன்றே டிரைலரும் வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும், தற்போது டிரைலர் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆடியோ விழாவின் தேதியை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மார்ச் இரண்டாவது வாரத்தில் பாடல் வெளியீட்டு விழாவும், டிரைலர் வெளியிட்டு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆனாலும் பட வெளியீட்டு தேதியில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி என்றும் அவர் மேலும் கூறினார்.
தீபாவளி, ரஜினி பிறந்த நாள், பொங்கல் என மாறி மாறி தேதியை அறிவித்துக்கொண்டே வரும் கோச்சடையான் படக்குழுவில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி