அரசியல்,செய்திகள் மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு…

மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு…

மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு… post thumbnail image
பீஜிங்:-இலங்கையில் 2009ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இலங்கைக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி கூறுகையில் “இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமை மற்ற நாடுகளுக்கு இல்லை. அந்நாடுகளை சீனாவும் எதிர்க்கிறது” என்று தெரிவித்தார். இப்பேட்டியின் போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி பெரிஸ் உடனிருந்தார்.
“நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அந்நாட்டுக்கு போதிய அறிவு உள்ளது” என்றும் வாங் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக இரு தீர்மானங்கள் இதுவரை இயற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது குறிப்படத்தக்கது. மூன்றாவதாக இயற்றப்படவுள்ள இத்தீர்மானத்தினால் பல்வேறு சர்வதேச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கிடையில் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரி பெரிஸ் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளார்.சமீப காலமாக இலங்கை கட்டுமானத்துறையில் சீனா பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி