மணமகனுக்கு ஏற்கனவே பலமுறை இதுமாதிரி வலிப்பு வந்துள்ளதாகவும், அதை மறைத்துவிட்டு, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாகவும் ஆத்திரப்பட்ட மணமகள் திடீரென தாலியை கழற்றி மணமகன் முகத்தில் எறிந்துவிட்டு திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.மணமகன் வீட்டார் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் ராதா மசியவில்லை. மணமகள் வீட்டாரும் தாங்கள் கொண்டு வந்த சீர்பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
இதுகுறித்து மணமகன் வீட்டார் போலீஸில் புகார் செய்தனர். போலீசார் வந்து மணமகளை சமாதானப்படுத்த முயற்சித்தும் மணமகள் மனம்மாறாததால் இருவீட்டாரும் திருமண மண்டபத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி