ஒரிஜினல் கஹானியில் வித்யாபாலன், கர்ப்பிணியாக இருப்பார், தொலைந்து போன கணவரை நிறைமாத கர்ப்பிணியாக தேடுவார். இந்த படத்தை எல்லோரும் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்,. அதனால் அதை ரீமேக் செய்தாலும் அப்படியே காப்பி அடித்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும் என்பதற்காக இந்த படத்தில் தென்னிந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றபடி பல மாற்றங்கள் செய்துள்ளேன்.முக்கியமாக இந்த படத்தில் எல்லோரும் எதிர்பார்ப்பது போல நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக படத்தில் வேறொரு டுவிஸ்ட் வைத்துள்ளோம். அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நயன்தாரா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவரை கர்ப்பிணியாக்கி ரசிகர்களிடம் இரக்கம் தேட நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக மிகவும் உறுதியான போராடும் குணம் கொண்ட ஒரு பெண்மணியாக அவரை இந்த படத்தில் காட்டியுள்ளேன். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். தமிழில் ‘நீ எங்கே என் அன்பே‘ என்ற தலைப்பை வைத்துள்ளோம்.இவ்வாறு இயக்குனர் சேகர் கம்முல்லா பேட்டியளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி