புதுடெல்லி:-போலியோ நோய்க்கு எதிராக இந்தியா எடுத்து வரும் தீவிர நடவடிக்கையின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவர் கூட இந்நோயால் தாக்கப்படவில்லை. இந்தியாவின் இச்சாதனைக்கு அமெரிக்கா தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளது.இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பாவல் இது குறித்து கூறும்போது:-
சர்வதேச சமூகம் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு உலக சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனையில் உரிய கவனம் செலுத்திய இந்தியாவை பாராட்டுவதாக கூறினார். பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு சவால் விடும் போலியோ நோயை தனது வழிமுறைகளாலும், உறுதியான கூட்டணியாலும் இந்திய அரசு களையெடுத்து வருவதை பாராட்டுவதாகவும் கூறினார்.
பல்வேறு அமைப்புகள், பங்குதாரரகள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் தனி நபர்கள் இத்திட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி