செய்திகள்,திரையுலகம் நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ தமிழில் ரீமேக்கின் பெயர் ‘நீ எங்கே என் அன்பே’…

நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ தமிழில் ரீமேக்கின் பெயர் ‘நீ எங்கே என் அன்பே’…

நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ தமிழில் ரீமேக்கின் பெயர் ‘நீ எங்கே என் அன்பே’… post thumbnail image
சென்னை:-இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மொசன் பிட்சர்சின் முதல் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படம் என்பதால் நீண்ட நாட்களாக நல்ல தலைப்புக்கு தேடி வந்தனர். தற்போது ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இப்படத்திற்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றி படக்குழு கூறும்போது, ‘பெண்களை கவரும் வண்ணம் உள்ள இக்கதையில் நயன்தாரா திறம்பட நடித்துள்ளார். மேலும் இந்தியில் வித்யாபாலன் நடித்து புகழ் பெற்ற பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகூட்டி வருகிறார்’ என்றனர்.

இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பு கதைக்கு மிகவும் பொருந்த கூடிய தலைப்பு என்றார். இந்தியில் ‘கஹானி’ படத்துக்கு இணையாக பெயரும், புகழும் இப்படம் ஈட்டும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இப்படம் ‘அனாமிகா’ என்னும் தலைப்பில் உருவாகி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி