இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒடிசா மக்களின் ஆசிர்வாதத்தால் தான் முதல்வராக இங்கே இருக்கி்ன்றேன். எனவே நான் இந்த மாநிலத்திற்கு சேவை செய்வதையே விரும்புகிறேன். அதனால் தான் பிரதமர் ஆவது ஒன்றும் எனது லட்சியம் இல்லை என தெரிவித்தாக கூறினார். நவீன் பட்நாயக்கின் இந்த பேச்சு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய சில மணி நேரத்தில் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் குற்றச்சாட்டு:-
கட்டாக்கில் பேசிய ராகுலின் பேச்சு, ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதாதளம் கட்சியை குற்றம் சாட்டுவதாக இருந்தது. அதாவது, ‘ஒடிசா அரசு ஊழல் மற்றும் சுரங்க மாபியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மாநில அரசு’ என கூறியிருந்தார்.
மாற்று அரசு பேச்சு:-
மத்தியில் மாற்று அரசு அமைவது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நவீன்பட்நாயக், அது குறித்து பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி தலைவர்களையும் அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களையும் சந்திக்க எந்த திட்டமும் என்னிடம் எதுவும் இல்லை என்றார் நவீன்பட்நாயக்.
முன்னதாக மா.கம்யூ., கட்சியிலிருந்து பிரகாஷ் கராத் மற்றும் இ.கம்யூ., கட்சியிலிருந்து பரதனும் நவீன் பட்நாயக்கை சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசிய அரசியல் நிலவரம் குறித்து பேசினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி