சென்னை:-நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. வேலை செய்பவர்களுக்காக அங்கு ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன.
யாரோ சிகரெட் பிடித்து விட்டு, அதை அப்படியே அந்த கூரை மீது வீசியிருக்கிறார்கள். இதனால் ஓலையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள்.
அதற்குள் தகவல் அறிந்து தியாகராயநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி