தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இரு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் காஜல் அகர்வாலின் ரகசிய காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதலன் ஆந்திராவில் பெரிய தொழில் அதிபராக இருக்கிறாராம்.
ஐதராபாத்தில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ள பிரபல கட்டுமான தொழில் அதிபரின் மகன் என்கின்றனர். காதலை தெழில் அதிபர் ஏற்கவில்லையாம். காஜல் அகர்வால் தொடர்பை துண்டிக்கும்படி மகனிடம் அவர் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் காதலில் இருவரும் பிடிவாதமாக இருப்பதாக தெலுங்கு திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.
உள்ளூரில் சுற்றினால் வெளியே தெரிந்து விடும் என்று கருதிதான் லண்டன் சென்றுள்ளார்கள். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கி ஜாலியாக சுற்றி இருக்கிறார்கள். இதனை தெலுங்கு நடிகர் ஒருவர் பார்த்து தெலுங்கு பட உலகினரிடம் பற்ற வைத்து விட்டாராம்.காதலர் வீட்டில் இவர்கள் காதலை பிரிக்க தீவிர முயற்சி நடக்கிறது. இன்னொரு புறம் காதல் ஜோடி திருமணத்துக்கு தயாராவதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்கின்றனர். புதுபடங்களில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொள்ளவில்லை. நிறைய பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி