வேற்று கிரகவாசிகள் இங்கு வருவதற்கு முன்னால் நாம் அங்கு சென்று அவர்களை அழித்து விடலாம் என்று பூமியில் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் சிறுவர்களை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.இதற்காக ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. தேர்வில் எல்லாத் திறமைகளும் கொண்ட எண்டரும் கலந்து கொள்கிறான். அவனை தேர்வு செய்த தேர்வுக்குழு, அவனை ஒரு அணிக்கு தலைவன் ஆக்குகிறது. இதுபோன்ற பல அணிகளை கொண்டு விண்வெளியில் ஒரு போட்டி நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் அணி வேற்று கிரக வாசிகளை அழிக்க தேர்வு செய்யப்படும் என்று தேர்வுக்குழு முடிவெடுக்கிறது.இந்த போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் மற்றொரு அணியின் தலைவனை எண்டர் தெரியாமல் கொன்று விடுகிறான். இதனால் மன வேதனை அடைந்து இந்தப்போட்டிக்கு தான் தகுதி அற்றவன் என்று நினைத்த எண்டர், உலகத்திற்கு திரும்புகிறான். பயிற்சித் தலைவனான ஐரும், எண்டரை சமாதானம் செய்கிறார். அந்த சமாதானத்தை ஏற்க மறுக்கிறான் எண்டர்.இறுதியில் எண்டரை பயிற்சி தலைவர் சமாதானம் செய்தாரா? வேற்று கிரக வாசிகளை அழித்தார்களா? என்பதே மீதிக்கதை.
எண்டராக நடித்திருக்கும் அசே பட்டபில்டு திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார். படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவின் ஹூட். டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது. ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.மொத்தத்தில் ‘எண்டர்ஸ் கேம்’ அருமையான கேம்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி