அரசியல்,செய்திகள் அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…

அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…

அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்… post thumbnail image
உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹசம் கான் அவர்களின் எருமை மாடுகள் ஐந்து நாட்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனது. அந்த எருமைகளை கண்டுபிடிக்க அமைச்சர் போலீசாருக்கு உத்தரவிட்டாராம்.

ஆனால் போலீஸாரால் காணாமல் போன எருமை மாடுகளை கண்டுபிடிக்க முடியாததால், மூன்று போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் சிறப்புப்படை ஒன்றை அமைத்து காணாமல் போன எருமை மாடுகளை கண்டுபிடித்து அமைச்சரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகி, உ.பி. மாநில ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. எந்த டிவியை திருப்பினாலும் இதுகுறித்த செய்திதான் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹசம்கான், கடந்த ஒருவாரத்தில் ஊடகங்கள் எனது எருமை மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. விக்டோரியா மகாராணியை விட நானும், எனது எருமை மாடுகளும் புகழ் பெற்றுவிட்டோம். டிவியில் செய்தியாக வரும் அளவிற்கு எனது எருமைமாடுகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என கிண்டலாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி