செய்திகள்,திரையுலகம் 70 வயது பாட்டியை திருமணம் செய்த 30 வயது வாலிபர்…

70 வயது பாட்டியை திருமணம் செய்த 30 வயது வாலிபர்…

70 வயது பாட்டியை திருமணம் செய்த 30 வயது வாலிபர்… post thumbnail image
இங்கிலாந்து:-பருவ வயதை தொட்டவர்கள் காதலில் ஈடுபடுவதுண்டு. அவர்களிடம் கேட்டால் காதலுக்கு கண்கள் இல்லை. அவரது நிறம் எனக்கு முக்கியம் இல்லை. மனதை தான் நான் நேசிக்கிறேன் என்பன போன்று பேசி விட்டு தங்களது காதலை தொடர்வார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அவளை கரம் பிடிப்பேன் என்று சினிமா பாணியில் வசனம் பேசி தங்களது காதலில் ஜெயித்தவர்களும் உண்டு.

ஆனால், காதலிப்பதற்கு வயதும் தடையில்லை என்பதற்கு சான்றாக எட்னா-சைமன் தம்பதியர்கள் விளங்குகின்றனர். தனது 70வது வயதில் எட்னா மார்டின் காதலர் சைமனை அவரது 30வது வயதில் சந்தித்தார். முதல் பார்வையிலேயே காதல் வந்தது என்று இருவரும் கூறுகின்றனர். தற்போது, 78 வயதை நெருங்கியுள்ள எட்னாவின் குழந்தைகள் அனைவரும் காதலரும், அவரது கணவருமான சைமனை விட வயதில் மூத்தவர்கள்.சைமனை விட இரு மடங்கு வயது கொண்டவராயினும், தம்பதியர்களின் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பில்லை என அவர்கள் கூறுகின்றனர். சைமன் கூறும்போது, நாங்கள் முயல்கள் போன்றவர்கள். செக்ஸ் என்பது வித்தியாசமானதுதான். செக்ஸ் குறித்து நீங்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். இவர்கள் இருவரும் சேர்ந்து, ஷி இஸ 78, ஹி இஸ் 39 ஏஜ் கேப் லவ் என்ற இங்கிலாந்து டாக்குமெண்டரி தொடரில் நடிக்கின்றனர். இது சேனல் 5 என்ற தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதே நிகழ்ச்சியில் மற்றொரு தம்பதியர்களும் நடிக்கிறார்கள். அவர்களுக்கும் 39 வயது வித்தியாசம் இருக்கிறது. ஜான் லாய்ட் (வயது 68) மற்றும் பில் அப்சாலம் (வயது 39) என்பவர்களான இவர்கள் பேஸ்புக் இணையதளம் வழியாக அறிமுகமானவர்கள். வயது வித்தியாசம் அவர்களது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி