இந்நிலையில், கடந்த ஐந்து மாதத்துக்கு முன் நடந்த விபத்தில் கார்த்திக் இறந்தார். இதன்பிறகு மீண்டும் இளையராஜாவை காதலிக்க ஆரம்பித்தார் சுகன்யா. இளையராஜாவை சுகன்யா திருமணம் செய்துகொள்ள சுகன்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. இதன்பிறகு தனது பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சுகன்யா சகஜமாக பேசியுள்ளார். இது பிடிக்காததால் சுகன்யாவை இளையராஜா கண்டித்துள்ளார். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.என் நடத்தையில் சந்தேகப்படும் உன்னை திருமணம் செய்தால் எப்படி வாழ முடியும்? எனவே, உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சுகன்யா கூறியதாக தெரிகிறது. இது இளையராஜாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெட்ரோல் பங்க்கில் வேலை முடிந்ததும் நேற்றிரவு 7 மணி அளவில் சுகன்யா வீட்டுக்கு இளையராஜா சென்றுள்ளார். அவர் கையில் பெட்ரோல் கேன் வைத்திருந்தார். அங்கு நின்று சுகன்யாவை அழைத்துள்ளார். அவர் வெளியே வந்தார்.
அப்போது இளையராஜா, உனக்காகத்தான் வாழ்ந்தேன். என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டாயே என்று கூறி, பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் கதறினார். அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டனர். பின் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். காதலி வீட்டு முன் காதலன் தீக்குளித்து இறந்தது மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி