அந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல் படுகின்றன. இதனால் வெளி நாட்டு உளவுப்பார்ப்பு சட்டத்தின் (எப்.ஐ.எஸ்.ஏ.) மூலம் பெரும்பாலான நிறுவனங்களை மிரட்டி கொத்து கொத்தாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் உலகம் தழுவிய உளவு வேட்டையை அந்நாட்டின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இணையதளங்கள், அமெரிக்க அரசை எதிர்த்து அந்த நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு களைத் தொடர்ந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்துக்கும் இணையதள நிறுவனங்களுக்கும் இடையே நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் அண்மையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி அமெரிக்க அரசு கோரிய ரகசிய தகவல்கள் குறித்த விவரங்களை இணையதள நிறுவனங்கள் பகிரங்கமாக வெளியிட நீதித்துறை அனுமதி அளித்தது. எனினும் முழுமையான விவரங்களை வெளியிடாமல் மேலோட்டமான புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிட வேண்டும், அதுவும் 6 மாதங்களுக்கு முந்தைய புள்ளிவிவரங் களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதித்துறை அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய இணையதள நிறுவனங்கள் அமெரிக்க அரசு கோரிய தகவல் புள்ளிவிவரங்களை திங்கள் கிழமை வெளியிட்டன. கடந்த 2013 ஜனவரி முதல் ஜூன் வரை மைக்ரோசாப்ட் நிறு வனத்தின் 15,000 கணக்குகள் தொடர்பாக 1000 தகவல்கள் கோரப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோரிக்கைகள் எப்.பி.ஐ. புல னாய்வு அமைப்பிடம் இருந்து வந்துள்ளன.
இதே காலகட்டத்தில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திடம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சார்பில் 7000 தகவல்கள் கோரப்பட்டுள்ளன. மிக அண்மைக் காலத்தில் கோரப்பட்ட தகவல்கள் குறித்து 2014 பிற்பாதியில் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2013-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 10,000 பயன்பாட்டாளர்களின் கணக்குகள் தொடர்பாக 1000 கோரிக்கைகளும் 2012-ம் ஆண்டில் 13 ஆயிரம் கணக்குகள் தொடர்பாக 1000 கோரிக்கைகளும் வந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.யாகூ நிறுவன பயன்பாட்டாளர் களில் மிக குறைவான தகவல்கள் மட்டுமே கோரப்பட்டன என்று அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கோடிக்கணக்கில் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன, அவை மூடி மறைக்கப் படுகின்றன என்று பன்னாட்டு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி