இரும்புக் குதிரை படத்தில் அதர்வாவும் பிரியா ஆனந்தும் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி தனியாக சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம்.காதல் காட்சிகளிலும் எல்லை மீறி நெருக்கம் காட்டுகிறார்களாம். காதல் கிசு கிசுக்கள் பற்றி பிரியா ஆனந்திடம் கேட்ட போது நட்பாகத்தான் பழகுகிறோம் என்றார்.
அதர்வாவும் நானும் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிற நட்சத்திரங்கள். படப்பிடிப்பில் கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கம் காட்டினோம். இதை வைத்து காதல் என்கின்றனர். எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம் என்றார்.எந்த நடிகையும் காதலை ஒப்புக்கொண்டதே இல்லை. பிரியா ஆனந்தும் அப்படித்தான் என்றார் படக்குழுவை சேர்ந்த ஒருவர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி