இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் சத்யா நாதெள்ளா, விக் குண்டோத்ரா ஆகிய இந்தியர்கள் உள்பட 9 பேர் இருந்தனர். இதில், அனுபவம் மிக்க அதிகாரியாக இருந்த சத்யாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்து நியமித்திருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மிகப்பெரிய நிறுவனமான இந்த மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்சும் நிறுவனத் தலைவர் பதவியில் விடுபட்டு, தொழில்நுட்ப ஆலோசகராக தன் பணியை தொடர உள்ளார். நிறுவனத்தின் 38 ஆண்டு கால வரலாற்றில் பால்மர் மற்றும் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து சத்யா மூன்றாவது சி.இ.ஓ.வாக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தை சேர்ந்தவரான சத்யா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளங்கலை படிப்பான எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கை மங்களூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மாஸ்டர் டிகிரியை (கம்ப்யூட்டர் சையின்ஸ்) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ. மாஸ்டர் டிகிரியை சிகாகோ பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி