மாநாட்டில் பா.ம.க. வேட்பாளர் எதிரொலிமணியனை அறிமுகப்படுத்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஒரு வருட ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க தேர்தல் கமிஷனரால் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இலவசங்களுக்கு ஆசைப்படக் கூடாது உங்கள் மீது திணிக்கப்படும் வரிமூலம் கிடைக்கின்ற பணத்திலிருந்துதான் மிக்சி, கிரைண்டர், வழங்கப்படுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுகுடிப்பதால் குடும்பம் சீரழிவது மட்டுமில்லாமல் தவறான செயலுக்கு ஆளாகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடாக விளங்குகிறது. பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்.தேசிய நெடுஞ்சாலைகளில் வைத்திருந்த டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 1000 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
தி.மு.க., அ.தி.மு.க. 47 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சிசெய்து வருவதை மாற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வேட்பாளர்கள் எதிரொலிமணியன், ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். அவர்கள் ஜெயித்து டெல்லிக்கு சென்றால் தான் மதுவை ஒழிக்க முடியும்.பா.ம.க.விற்கு ஓட்டு போட்டால் தான் உங்கள் பேரன், பேத்திகளுக்கு நாங்களும் இலவசமாக உயர்கல்வி வரையும், விவசாயிகளுக்கு வேண்டிய தரமான விதை, நல்ல தரமான உரம், பூச்சி மருந்தும், 2 பஞ்சாயத்துக்கு சேர்ந்து இலவசமாக ஒரு டிராக்டரையும் தருவோம். இதற்காக திட்டமும் வைத்துள்ளோம்.எனவே உங்கள் தலைவிதியை நீங்களே நிர்ணயிக்கும் ஓட்டை பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி