மும்பை:-பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏப்ரல் 10–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 27–ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியும் நடக்கிறது. தேர்தல் தேதியை அறிவித்த பிறகே ஐ.பி.எல். போட்டி தேதியை அறிவிப்போம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:–
தேர்தல் தேதியை அறிவிக்காதவரை நாங்கள் ஐ.பி.எல். போட்டி தேதியை வெளியிட இயலாது. தேர்தல் தேதி வருகிற 27–ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் தேதி வெளியான ஒரு நாள் அல்லது 2 தினம் கழித்து ஐ.பி.எல். போட்டி நடைபெறும் தேதி விவரத்தை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி