மும்பை:-7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்– மே மாதங்களில் நடக்கிறது.பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப் படுகிறது. எந்த இடம் என்பது பற்றி முடிவாகவில்லை. இலங்கை வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகளில் ஒன்றில் நடத்தப்படலாம்.
ஐ.பி.எல். போட்டிகள் 8 வாரங்கள் நடத்தப்படும். மொத்தம் 59 ஆட்டம் நடைபெறும். பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 10–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை நடைபெற வாய்ப்பு இருப்பதால் ஐ.பி.எல். போட்டியின் கடைசி 3 வாரத்தை இந்தியாவில் நடத்தலாமா என்பது பற்றி கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.
அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு நாள் அல்லது 2 நாள் முன்பு ஐ.பி.எல். போட்டி அட்டவணையை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தேர்தல் தேதியை அறிவிக்கும் வரை காத்திருக்க மாட்டோம் என்று அந்த நிர்வாகி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி