இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை விளக்கமாக திகழ்வதாகவும், உண்மையான கேப்டனாக விளங்கும் நோக்கில் அவர் ஆட்ட நுணுக்கங்களை விரைவாக கற்றுக்கொள்வதாகவும், நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு அவர் முன்மாதிரியாக விளங்குவதாகவும் குரோவ் கூறியுள்ளார்.டிராவிட்டை போல தீவிரமாகவும், சேவாக்கை போல தைரியமாகவும், சச்சினை போல் அசாதாரணமாகவும் அவர் விளையாடுவதாக குரோவ் கூறியுள்ளார்.
அவரது தனித்திறமையே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளதாகவும் குரோவ் மேலும் கூறியுள்ளார். அவர் பந்துகளை அடித்து ஆடும் அழகு வியப்பூட்டுவதாக அமைந்துள்ளதாகவும், அவர் ஆட்டத்தின் இயல்பை பிடித்துவிட்டால் எப்படிப்பட்ட பந்து வீச்சையும் சிதறடித்து ரன்களை குவிப்பார் என்றும் குரோவ் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி