படங்கள் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இப்போது மார்க்கெட் முற்றிலுமாக ஜீரோ ஆகிவிட்டது. டயட், உடற்பயிற்சி செய்து உடல்எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சான்ஸுக்காக காத்திருந்தார். கண்கள் பூத்துப்போனதுதான் மிச்சம்.இதற்கிடையில் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்த அசின் அங்குள்ள தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அதை மறுத்தபோதும் காதல் உணர்வு அவரை குஷியில் ஆழத்தி இருக்கிறது. கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு ஸ்லிம் ஆன அவர் தற்போது சந்தோஷ மிகுதியால் கொழுக் மொழுக் என குண்டாகி ரசிகர்களிடம் இருந்த தனது இமேஜை உடைத்திருக்கிறார்.
சமீபத்தில் இணைய தளத்தில் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்த கோலிவுட்காரர்கள், அசினுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பெருத்துவிட்டார் என்று முணுமுணுக்கின்றனர். அதே சமயம் ஸ்லிம் ஆக இருந்து வாய்ப்பு கிடைக்காததால் கொழுக் மொழுக் ஆகி இயக்குனர்களின் கவனத்தை அவர் ஈர்க்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி