அதனால் ‘துப்பாக்கி’யைத் தொடர்ந்து ‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் பிசியாக இருந்த விஜய், முருகதாசுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருந்தார். இரண்டு படங்களும் முடிந்த பிறகு முருகதாசுடன் இணைவது என முடிவு செய்திருந்த நிலையில், தற்போது இரண்டு படங்களும் திரைக்கு வந்துவிட்டதால் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் தயாராகிவிட்டார்.
இந்நிலையில், இருவரின் கூட்டணியில் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். துப்பாக்கி படத்தின் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை தரும் முடிவில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி