சென்னை:-மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாய் மூடி பேசவும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர்கள் இவருவருக்கும் காதல் பற்றிவிட்டது என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது.
இந்நிலையில் துல்கர், நஸ்ரியா பற்றி கூறுகையில், வாய் மூடி பேசவும் மிகவும் ஜாலியான படம் என்பதால் அதில் நடிக்க சம்மதித்தேன். என்னுடன் நடிக்கும் நஸ்ரியா என் அப்பாவுக்கு மகளாக பல படங்களில் நடித்துள்ளார்.என் அப்பாவுக்கு மகளாக நடித்துள்ள நஸ்ரியா எனக்கு தங்கச்சி போன்றவர். அவர் எதையுமே பாசிட்டிவாக யோசிப்பவர். அவர் படப்பிடிப்புக்கு வந்தாலே அந்த இடம் ஜாலியாகிவிடும்.
மேலும் தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் தான் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வாய் மூடி பேசவும் ரிலீஸான பிறகே பிற பட வாய்ப்புகளை ஏற்பது பற்றி யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி