வேறு வழியில்லாமல் அவருக்காக திரைக்கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து அவருடைய கேரக்டரையும் மாற்றியுள்ளார் இப்பட இயக்குனர் சேகர் கமுல்லா. படம் இப்போது திரைக்கு வரும் நிலையில் உள்ளது.நயன்தாராவை சுற்றித்தான் முழு படமும். இதனால் நயன்தாராவை ஓவராக புகழ்ந்து வருகிறார் சேகர் கமுல்லா. அவர் கூறியதாவது: மாயமான தனது கணவரை தேடி வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் பட ஹீரோயின். அவர் கர்ப்பிணி என்றால் சுலபமாக அனுதாபம் அள்ளுவார். அதுபோல் நடிப்பதாலும் எளிதில் ரசிகர்களை கவரலாம்.
ஆனால் கர்ப்பிணி இல்லாமல் அந்த கேரக்டரில் ரசிகர்களின் அனுதாபம் பெறுவதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் நயன்தாராதான் பெஸ்ட்.அவர் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்தி பட ரீமேக் என்றாலும் சீன் பை சீன் என அப்படியே காப்பி அடிக்கவில்லை. முடிந்த அளவுக்கு காட்சிகளை மாற்றி எடுத்திருக்கிறேன். படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருக்கிறது. இவ்வாறு சேகர் கமுல்லா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி