செய்திகள் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…

கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…

கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்… post thumbnail image
சாரஜெவோ:-பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் லிசினா என்ற பெண் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அங்கு திடீரென வந்து கடைக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளான்.

ஆனால் அந்த பெண் பயப்படாமல் கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து தர்ம அடி கொடுத்துள்ளார். மேலும் அவனுடன் போராடி துடைப்பத்தை கொண்டு அவனை ஓட ஓட விரட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.

சாரஜெவோவில் சிறிய கடைகளை குறிவைத்து திருடர்கள் அவ்வபோது கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி