செய்திகள்,திரையுலகம் இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…

இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்…

இந்தியில் நேரடியாக மோதும் ரஜினி,அமிதாப் பச்சன்… post thumbnail image
சென்னை:-ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார்.

இந்தியிலும் ஏப்ரல் 11ம் தேதி ‘கோச்சடையான்’ வெளியாக இருக்கிறது. இதே தேதியில் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ‘பூத்நாத் ரிட்டன்ஸ்‘ படமும் வெளிவரவிருக்கிறது.இரண்டாவது முறையாக பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படத்துடன் அமிதாப் படம் மோதவிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்துடன் அமிதாப் நடித்த ‘ஜும் பார்பர் ஜும்’ வெளியாகி இருக்கிறது.

ரஜினி மற்றும் அமிதாப் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் மாற்றம் ஏற்படும் என்று கணித்திருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி