சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர். இவர் விஜய்க்காக ஒரு புதுமாதிரியான காமெடி கதையை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். வரிசையாக சீரியஸ் படங்களிலேயே நடித்து வந்த விஜய், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு முழுநீள காமெடிக்கதையில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவருடைய சம்பளம்தான் தயாரிப்பாளருக்கு பெரிய பிரச்சனை. நாள் ஒன்றுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம் தீபிகா படுகோனே. இதனால் சிம்பு தேவன் மற்றும் விஜய் சற்று அதிர்ச்சி அடைந்தாலும், தீபிகாவை ஒப்பந்தம் செய்ய படத்தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். முருகதாஸ் படம் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி