இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.இந்நிலையில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் நேற்று காலை 11.30 மணியளவில் ஹாப் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து செலுத்தியதால் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் ஜிம் கேர்ரி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹாப் மேன் சினிமாவின் மிக உயரிய ஆஸ்கர் விருது பெற்றவர். கடந்த 2008–ம் ஆண்டு வெளியான ‘போர்ட்ரயல்’ என்ற படத்தில் இவரது நடிப்பை பாராட்டி சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இப்படத்தை தருமான் கபோட் எழுதி, இயக்கி இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி