செய்திகள்,திரையுலகம் நேரடி ஒளிபரப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய நடிகை…

நேரடி ஒளிபரப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய நடிகை…

நேரடி ஒளிபரப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய நடிகை… post thumbnail image
லண்டன்:-லண்டன் தொலைக்காட்சி ஒன்றில் ‘பிக் பிரதர்‘ நிகழ்ச்சி கடந்த வாரம் நேரடியாக நடந்துகொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகை Casey Batchlelor என்ற நடிகையை Jasmine Waltz என்ற மற்றொரு நடிகை மோசமான வார்த்தை ஒன்றை கூறி திட்டிவிட்டாராம். இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Jasmine Waltz திட்டிய வார்த்தை என்ன என்று தெரியுமா? bunny boiler என்பதுதான் அந்த வார்த்தை. bunny boiler என்பது Fatal Attraction என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் வில்லியின் பெயர். அந்த பெயரை கேட்டாலே அமெரிக்கர்கள் அருவருப்பு அடைவார்கள். தன்னை ஒரு சக நடிகையே இவ்வளவு மோசமாக அதுவும் நேரடி நிகழ்ச்சியில் திட்டியதால் நிகழ்ச்சி மேடையிலேயே Casey Batchlelor அழுதுவிட்டாராம். அதன்பின்னர் பிக் பிரதர் நிகழ்ச்சி நடத்துனர்கள் வருத்தம் தெரிவித்து நடிகையை சமாதானம் செய்தார்களாம்.

இதில் உண்மை என்னவென்றால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்தான் வேண்டுமென்றே நிகழ்ச்சியை பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகை Casey Batchlelor ஐ திட்டச் சொன்னார்களாம். இது மிகவும் தாமதமாகத்தான் Casey Batchlelorக்கு தெரியவந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி