தற்போது கெளதம் மேனன் இயக்கவிருக்கும் அஜீத் படத்திற்கும் கார்த்திக்தான் வில்லன் என்பது லேட்டஸ்ட் தகவல்.அஜீத், அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்க இருக்கும் படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கிறது. இந்த படத்திற்கு வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க கெளதம் மேனன் நடிகரை தேடிக்கொண்டிருந்தபோது அனேகன் படத்தில் கார்த்திக் வில்லனாக நடிக்கும் தகவல் கிடைத்தது.
உடனே நேரில் அவரை சென்று பார்த்த கெளதம் மேனன் அவரையே வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டார். கெளதம் மேனன் படத்திற்காக உடல் எடை சற்று அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார் கார்த்திக். இதற்காக தினமும் காலை ஒருமணி நேரம் ஜிம் செல்கிறார்.இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் நான் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவேன் என கார்த்திக் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி