ஆனால் அதெல்லாம் உண்மையில்லை. சின்ன பட்ஜெட் படங்கள் தான் தியேட்டர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்றை உண்மையை போட்டு உடைத்தார் அமிராமி தியேட்டரின் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.நேற்று நடந்த ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனில் பேசிய அவர் விஜய் அஜித் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் பட லட்சணத்தை புட்டு புட்டு வைத்தார்.நான் ஒரு திரையரங்கு உரிமையாளராகச் சொல்கிறேன். சின்ன பட்ஜெட் படங்கள் தான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பெரிய ஹீரோக்களோட படங்கள் வருஷத்துக்கு 12 படங்கள் வருது. அதெல்லாம் ரெண்டு வாரம் கூட ஓட மாட்டேங்குது. மீதி நாட்களுக்கு நாங்க என்னங்க பண்றது? அந்த மாதிரியான நேரங்கள்ல சின்ன படங்கள் தான் எங்களுக்கு கை கொடுக்குது.
ஆனா சின்ன படங்கள் எக்கச்சக்கமா ரிலீஸ் ஆகுறதுனால எல்லாப் படங்களுக்கும் தியேட்டர்கள் கொடுக்க முடியல. போன டிசம்பர் மாசம் கிட்டத்தட்ட 31 நாட்கள்ல 18 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இப்படி ரிலீசானா எப்படி ரசிகர்கள் வருவாங்க. இதையெல்லாம் யோசிச்சு திரையுலகினர் இதற்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்” என்றார்.அவர் சொன்னது போல பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் அது சமீபத்தில் ரிலீசான ஜில்லாவும், வீரமும் தான். பொங்கலுக்கு ரிலீசான அந்த இரண்டு பெரிய படங்களுமே எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை என்று மறைமுகமாக தாக்கினார் அபிராமி ராமநாதன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி