இதில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், ஆஷா மிர்ஜே என்பவர், பேசியதாவது:டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில், கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்; இதற்கு காரணம், அந்தப் பெண் தான். இரவு, 11:00 மணிக்கு, சினிமா பார்க்க, ஆண் நண்பருடன், அவர் ஏன் செல்ல வேண்டும்?மும்பை, சக்தி மில்ஸ் வளாகத்தில், பெண் புகைப்பட நிருபர், கும்பலால், பலாத்காரம் செய்யப்பட்டதிலும், அந்தப் பெண் மீது தான் தவறு உள்ளது. ஏனெனில், மாலை, 6:00 மணிக்கு மேல், மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்திற்கு, ஆண் நண்பருடன், ஏன் அந்தப் பெண் தனியாக செல்ல வேண்டும்?இது போன்ற செயல்களை பெண்கள் தவிர்த்தால், பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்காது.
பெண்கள் அணியும், ஆபாச, கவர்ச்சிகரமான உடைகளும், அவர்களது நடவடிக்கைகளும், இதுபோன்ற துயர சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக இருக்கின்றன. அதனால், பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, ஆஷா மிர்ஜே பேசியிருந்தார்.அவரின் பேச்சு, அம்மாநில, ‘டிவி’களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அமைப்பின் முக்கிய நிர்வாகியே, பெண்களுக்கு எதிராக பேசுவதா?’ என, பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.இந்த விவகாரம், ஊடகங்களில் பெரிதாக அலசப்பட்டதை அடுத்து, தன் பேச்சுக்காக, ஆஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி