செய்திகள் நடுவானில் விமானங்கள் மோதல்…

நடுவானில் விமானங்கள் மோதல்…

நடுவானில் விமானங்கள் மோதல்… post thumbnail image
ஜப்பான்:-ஜப்பானில் உள்ள மதுசுசிமா என்ற இடத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமான சாகசங்களை நிகழ்த்தும் ஜெட் விமானங்கள், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் திடீரென ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

ஆனாலும் அந்த விமானங்களில் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இரு விமானங்களும் உடனடியாக பத்திரமாக தரை இறக்கப்பட்டன. 2 விமானங்களிலும் 3 பைலட்டுகள் இருந்தனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

ஒரு விமானத்தின் மூக்கு பகுதியும், இன்னொரு விமானத்தின் பக்கவாட்டு பகுதியும் லேசான சேதம் அடைந்திருந்தன.நடுவானில் விமானங்கள் மோதிக்கொண்ட போதிலும் அவை வெடித்து சிதறாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி