இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
5. நேர் எதிர் :-ரிச்சர்ட், பார்த்தி,வித்யா,மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து வெளியான ‘நேர் எதிர்‘ திரைப்படம் சென்னையில் மொத்தம் நடந்த 36 ஷோவ்களில் ரூ.1,36,413 வசூலித்துள்ளது.

4. மாலினி 22 பாளையம்கோட்டை:- நடிகை ஸ்ரீ பிரியா டைரக்ட் செய்துள்ள மாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் நடந்த 63 ஷோவ்களில் ரூ.4,65,664
வசூலித்துள்ளது.மாறுபட்ட திரைக்கதை கொண்ட இத்திரைப்படம் வரும் வாரம் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. கோலி சோடா:- முற்றிலும் சிறுவர்கள் நடித்துள்ள இத்திரைப்படம் அனைவரிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளது.சென்னையில் மொத்தம் நடந்த 99 ஷோவ்களில் இத்திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.24,17,808 வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. ஜில்லா:-விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் சென்ற வாரம் போலவே 2ம் இடத்தில் உள்ளது.
சென்னையில் மொத்தம் நடந்த 147 ஷோவ்களில் இத்திரைப்படம் ரூ.5,09,89,836 வசூலித்துள்ளது.
1. வீரம்:- தொடர்ந்து இந்த வாரமும் அஜித் நடித்த வீரம் திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது.
ஜில்லா படத்தை விட அதிகமான திரையரங்குகளில் வீரம் வெளியானது என கூறினாலும் வசூலில் வீரம் இந்த வாரம் சென்னையில் மொத்தம் நடந்த 180 ஷோவ்களில் ரூ.5,36,83,579
வசூலித்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி