இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார்.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு இதுவரை எந்த படத்திலும் நடிக்காத புதுமுகமாக தேடி அலைந்த ஷங்கர், இறுதியில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகனான ராம்குமாரை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகியுள்ளார். இதுவரையில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்த அனுபவமே இருந்தாலும், ஷங்கர் கேட்டுவிட்டாரே என்பதற்காகவே ராம்குமார் மறுப்பு ஏதும் சொல்லாமல் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
நடிப்பு என்பது இவரது ரத்தத்தில் ஊறிய விஷயம் என்பதால் இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் வித்தியாசமான வில்லனாக கலக்கி வருகிறாராம் ராம்குமார். இவரது நடிப்பை பார்த்த படக்குழுவினர் ராம்குமார் அதிரடி வில்லனாக சினிமாவை ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி