புதுடெல்லி:-பான் கார்டு வழங்குவதில் உள்ள நடைமுறைகள் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை உறுதி செய்ய ஒரிஜினல் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். சுய சான்றிட்ட நகலுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகு இவை உடனடியாக திருப்பி அளிக்கப்படும்.
இந்த புதிய பான் கார்டுக்கு விண்ணப்ப கட்டணம், வரிகள் உட்பட ரூ.105 இருக்கும். சேவை வரிகளில் எந்த மாற்றமும் இல்லை’ என வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்பு பான் கார்டு விண்ணப்ப கட்டணம் வரிகள் உட்பட ரூ.94 ஆக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி