இதன்படி, பான் கார்டு கேட்டு அதற்கான மையங்களில் விண்ணப்பிக்கிறவர்கள், விண்ணப்பத்துடன் அடையாள ஆவணம், முகவரி, பிறந்த தேதி ஆவணங்களை இணைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களால் சான்றளிக்கப்பட்ட நகல் ஆவணங்களுடன், அசல் ஆவணங்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஒப்பிட்டு சரி பார்த்து விட்டு அசல் ஆவணங்கள் உடன் திருப்பி வழங்கப்படும். புதிதாக பான் கார்டு வழங்கக்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதற்காக ரூ.105 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அனைத்து வரிகளும் அடக்கம்.
வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், பினாமி சொத்துக்களை வாங்கவும், விற்கவும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டு, எதிர்காலத்தில் இதைத் தவிர்க்கும் விதத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி