தமிழில் ஜில்லா வெற்றியடைந்துள்ள நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். தெலுங்கிலும் ஆர்.டி.நேசனே இப்படத்தை இயக்குகிறார். இதுவரை தெலுங்கில் ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்து விஜய் நடித்து வந்துள்ளார். முதன்முதலாக விஜய் நடித்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிக்க மகேஷ் பாபு பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் இருந்து ஒரு முக்கிய நடிகரையோ, அல்லது மலையாள நடிகர் மம்மூட்டியையோ நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
தெலுங்கு ரசிகர்களை கவரும் வண்ணம் இப்படத்தில் சில மாற்றங்களை செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதற்கு தேர்வு நடைபெற்றுவரும் வேளையில், தமிழ் பதிப்பில் நடித்த காஜல் அகர்வால் தாமாகவே முன்வந்து தெலுங்கிலும் நடிக்க வாய்ப்பு வழங்கும்படி இயக்குனரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.இருப்பினும் இயக்குனர் எடுக்கும் முடிவுதான் கடைசி முடிவாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு உறுதியுடன் கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி