இங்கிலாந்து:-‘யுகே பாக்ஸ் ஆபீஸ்’ (UK Box Office)-ல் கடந்த இரண்டு வாரங்களிலேயே ‘ஜில்லா’ திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது.இந்த இரண்டு வாரங்களில் ‘ஜில்லா’ திரைப்படம் ஏறக்குறைய 50,000 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது.
ஆனால், ‘தூம் 3’ திரைப்படம் ஐந்து வாரங்களுக்கு முன் வெளிவந்து 45,000 யுஎஸ் டாலர்களைதான் வசூல் செய்துள்ளது.‘யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ்’ நிலவரங்களுக்கு அடுத்து அதிகமாக பேசப்படும் ‘யுகே பாக்ஸ் ஆபீஸ்’ல் ஒரு தமிழ்ப் படம் , 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழிக்கப்பட்டு படமான ‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருப்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெருமையாகப் பேசப்படுகிறது .
தமிழ்ப் படங்களின் உலக மார்க்கெட் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி