அப்போது, பி.சி.சி.ஐ., தரப்பில் தேர்தல் முடிவை அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ., தரப்பில் வாதாடுகையில்,‘‘ மொத்தமுள்ள 33ல் 26 ஓட்டுக்கள் பெற்று, லலித் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், பிரிமியர் கிரிக்கெட்டில் ரூ. 500 கோடி வரை சுரண்டியவர் மோடி. இவர் தேர்தலில் போட்டியிட்டிருக்க கூடாது,’ என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், லலித் மோடி என, இருதரப்பில் இருந்தும் ஒருவர் மாற்றி ஒருவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால், தேர்தல் குறித்த வழக்கு திசைமாறி, இருவர் மீதான விசாரணை அளவுக்கு சென்றது.
இதையடுத்து வெறுத்துப் போன, சுப்ரீம் கோர்ட் ‘பெஞ்ச்’ கூறுகையில்,‘ கிரிக்கெட் நிர்வாகத்துக்கு வருபவர்கள் குறைந்தது ரஞ்சி கோப்பை அளவிலான போட்டிகளில் மட்டுமாவது விளையாடி இருக்க வேண்டும். இந்த வழக்கு வரும் மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது,’ என, தெரிவித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி