இந்தோனேசியா:-காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சொந்தமானது. ஆனால் விலங்கு, பறவை என 2 வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
இந்தோனேசியாவில் ஒரு குரங்கும், கோழியும் தினந்தோறும் காதல் ரொமான்சில் ஈடுபடுவதை பார்ப்போர் இப்படித்தான் கூறுகிறார்கள்.இந்தோனேசியாவின் ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர், அங்குள்ள பானுவாங்கி சந்தைக்கு தினமும் தனது குரங்கை சங்கிலியால் கட்டி அழைத்து வருகிறார். அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது.
கோழியை பார்த்த பின்னர், ஹக்கிம் எவ்வளவுதான் முயன்றாலும் குரங்கு அங்கிருந்து நகராது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன இதை பார்ப்போர் கலிகாலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என கூறியபடியே கடந்து செல்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி