போட்டி இல்லாத காலங்களிலும் வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். அப்போது தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற விவரங்களை தெரியப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் இதை செய்ய அவர் தவறி விட்டார். பேட்மிண்டன் சம்மேளனத்தின் ஊக்கமருந்து தடுப்பு கழக அதிகாரிகள் மூன்று முறை முயற்சித்தும், அந்த விவரங்களை அவர் வழங்கவில்லை.
இதையடுத்து ஊக்கமருந்து தடுப்பு கழக விதிகளை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2015–ம் ஆண்டு ஜனவரி 23–ந்தேதி வரை தடை நீடிக்கும். இதனால் கொரியாவில் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் அவரால் பங்கேற்க முடியாது. இன்னொரு கொரிய பேட்மிண்டன் வீரர் கிம் கி–ஜங்குக்கும் இதே பிரச்சினைக்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி