ஐ.நா:-ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தற்போது 47 நாடுகள் உறுப்பினராக அங்கம் வகிக்கின்றன. இதில் இந்தியா, ஆசிய பசிபிக் பிரிவில் இடம் பெற்றுள்ளது. 3 ஆண்டுகள் கொண்ட இந்தியாவின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.
இதற்காக அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், மீண்டும் உறுப்பினராக இந்தியா போட்டியிட இருப்பதாக, ஐநாவுக்கான இந்திய தூதர் அசோக் குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆசிய பசிபிக் பிரிவில் ஐநா உறுப்பினர் பதவிக்கு 4 இடங்களுக்கு 7 நாடுகள் போட்டியிடுகின்றன. இதில் இந்தியாவும் பங் கேற்கிறது.
சர்வதேச நாடுகளிடையே அமைதி மற்றும் பாதுகாப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதனால், ஐநா மனித உரிமை கவுன்சில் உறுப்பினராவதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி