மும்பை:-‘பாபி ஜஸூஸ்’ என்ற பாலிவுட் படத்தில் பிச்சைக்காரியாக நடித்து பரபரப்பைக் கிளப்பிய வித்யாபாலன் திருமணத்துக்குப் பிறகும் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்திருக்கிறார்.இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
எனக்கு இன்னொரு நடிகைக்கு முத்தம் கொடுப்பது என்பது பிடிக்காத விஷயம் தான். ஆனால் அப்படி நடித்தே ஆக வேண்டும் என்று டைரக்டர் கேட்டால் என்னுடைய செலெக்ஷன் சல்மா ஹயக் என்ற நடிகை தான். அவர் என்னைவிட கொஞ்சம் மூத்தவர். ஆனால் பயங்கர கவர்ச்சியானவர்!
ஆண்களில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனிக்கு முத்தம் தர ஆசை. அவர் திருமணம் செய்வதை நான் விரும்பவில்லை. காரணம் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியவர் அவர். இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது என்றாலும், ஜார்ஜ் பிரம்மச்சாரியாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார் வித்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி