January 28, 2014

செய்திகள், திரையுலகம்

‘லிப் டூ லிப்’ கிஸ் கொடுக்க சொன்ன கண்டிப்பா கொடுப்பேன்-என கூறும் நடிகை வித்யாபாலன்…

மும்பை:-‘பாபி ஜஸூஸ்’ என்ற பாலிவுட் படத்தில் பிச்சைக்காரியாக நடித்து பரபரப்பைக் கிளப்பிய வித்யாபாலன் திருமணத்துக்குப் பிறகும் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்திருக்கிறார்.இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:- எனக்கு இன்னொரு நடிகைக்கு முத்தம் கொடுப்பது என்பது பிடிக்காத விஷயம் தான். ஆனால் அப்படி நடித்தே ஆக வேண்டும் என்று டைரக்டர் கேட்டால் என்னுடைய செலெக்‌ஷன் சல்மா ஹயக் என்ற நடிகை தான். அவர் என்னைவிட கொஞ்சம் மூத்தவர். ஆனால் பயங்கர கவர்ச்சியானவர்! ஆண்களில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனிக்கு முத்தம் தர ஆசை. அவர் திருமணம் செய்வதை நான் விரும்பவில்லை. காரணம் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியவர் அவர். இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது என்றாலும், ஜார்ஜ் பிரம்மச்சாரியாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார் வித்யா.

செய்திகள்

பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடித்த சிறுவன்…

பெர்லின்:-தெற்கு ஜெர்மனியின் பவேரியா நகரில் 16 வயது சிறுவன் மொம்பை துப்பாக்கியை வைத்து கொள்ளை அடித்துள்ளான். பின்னர் சைக்கியில் தப்பி சென்றுள்ளான். சிறுவன் அண்டை நாடான ஆஸ்டிரியாவிற்கு தப்பி சென்றபோது அவனை போலீசார் எல்லையில் வைத்து கைது செய்தனர்.சிறுவன் வங்கிக்குள் புகுந்ததும் பலத்த சத்ததுடன் வங்கின் நாலாபக்கமும் துப்பாக்கியால் சுட்டுள்ளான். பின்னர் அவனைவரும் கையை தூக்குமாறு மிரட்டியுள்ளான். அங்கு பயத்தில் இருந்தவர்கள் அவனிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கி கொண்ட சிறுவன் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளான். அப்போது காரில் சென்று அவனை பிடித்தனர். சிறுவன் எல்லையை தாண்ட முயற்சித்த போது போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்தனர்.

அரசியல், செய்திகள், திரையுலகம்

மோடியுடன் சேர்வதால் சல்மான்கான் படங்களை புறக்கணியுங்கள் – இஸ்லாமிய மதக்குருக்கள்…

மும்பை:-பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பாராட்டும் ஆதரவும் தெரிவித்தார்.குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து நடிகர் சல்மான்கான் விளக்கம் அளித்தார். என்றாலும் அதை இஸ்லாமிய மதக் குருமார்கள் ஏற்கவில்லை.மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு அறிவிப்பை வெளயிட்டார்கள். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:–குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான்கான் கூறி இருப்பது உள்நோக்கம் கொண்டது. இஸ்லாமியர்களின் உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார்.எனவே சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும். நரேந்திர மோடி தன் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக எதையும் செய்வார். இது சல்மான்கானுக்கு தெரியுமா? குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா?இவ்வாறு இஸ்லாமிய மதக்குருமார்கள் கூறி உள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

நடிகை குஷ்பு வந்த கார் மீது பஸ் மோதல்…

சென்னை:-குஷ்பு புதிதாக ‘ஆடி கியு5‘ ரக கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். போக்குவரத்து சிக்னல், அருகில் சென்றபோது சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மாநகர பஸ் குஷ்புவின் கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கி சேதமானது. பம்பர் மற்றும் விளக்குகளும் உடைந்தது. இதில் குஷ்புக்கு காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசில் அவர் புகார் அளிக்கவில்லை.இது குறித்து குஷ்பு கூறியதாவது:– விபத்தில் எனக்கு காயம் ஏற்படவில்லை. நன்றாக இருக்கிறேன். ஆனாலும் இந்த விபத்து எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ் டிரைவர் வேகமாக பஸ்சை ஓட்டி வந்து என் கார் மீது மோதினார். போக்குவரத்து விதியை அவர்கள் கடைபிடிப்பது இல்லை. வாகனங்களை நிறுத்துவதற்காக போடப்பட்ட கோடுகளையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. பஸ் மோதியதில் என் காரை ஓட்ட முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது. விபத்து குறித்து புகார் செய்தால் அவர்களுக்கு யூனியன் பாதுகாப்புக்கு வரும் டிரைவரின் குடும்ப சூழல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புகார் செய்யாமல் விட்டுவிட்டேன்.எனக்கு இந்த காரை எனது கணவர் சுந்தர்.சி. பரிசாக தந்தார். நல்ல வேளை, விபத்தில் உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. எனக்கு இது மோசமான நாளாக அமைந்தது.இவ்வாறு குஷ்பு கூறினார்.

செய்திகள், திரையுலகம்

மருதநாயகம் படத்தை தொடங்க கமல்ஹாசன் விருப்பம்…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ‘மருதநாயகம்‘ ஒரு வரலாற்றுத் திரைக் காவியமாகச் சித்தரிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய கதை இதுவாகும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக இருந்த இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சினையும், மற்ற சில வெளிவராத பிரச்சினைகளும் இந்தப் படத்தைக் கிடப்பில் போட்டன.தற்போது ‘விஸ்வரூபம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாகக் கூறியுள்ளது அவரது ஆர்வத்தினை மேலும் தூண்டியுள்ளது. அதனால், தன்னுடைய தீவிரமான ரசிகர்களுக்காக ‘மருதநாயகம்’ படத்தினைத் தயாரிக்கும் முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள், திரையுலகம்

நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானார். சமீபத்தில் வீணா மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் சினிமாவுக்கு தான் முழுக்கு போடப் போவதாக அறிவித்தார். மேலும்,தான் ஒரு போதும் கவர்ச்சி படங்களில் நடிப்பதில்லை என்றும் சமூக சேவைகளிலும்,சமூக நல திட்டங்களிலும் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

செய்திகள், விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்) ஏடிபி தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறினார். நடால் முதல் இடத்தையும், ஜோகோவிச் 2வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சாதனை வீரர் ரோஜர் பெடரர் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.ஆஸி. ஓபன் வெற்றி குறித்து வாவ்ரின்கா கூறியதாவது: இந்த வெற்றிக்கு நான் முழு தகுதி உடையவன் என நிச்சயமாக நம்புகிறேன்.கடந்த 2 வாரமாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்கள் டென்னிசில் கடந்த 10 ஆண்டுகளாக பெடரர், நடால், ஜோகோவிச், மர்ரே ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பெரிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவர்களை தவிர்த்து மற்ற வீரர்களால் பட்டம் வெல்ல முடிந்ததில்லை. 2009 யுஎஸ் ஓபனில் மட்டும் ஜுவன் மார்டின் டெல் போட்ரோ விதிவிலக்காக பட்டம் வென்றார். மகத்தான வீரர்களான ஜோகோவிச், நடால் இருவரையும் வீழ்த்தி ஆஸி. ஓபன் பட்டத்தை கைப்பற்றியது திருப்தியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.இவ்வாறு வாவ்ரின்கா கூறியுள்ளார்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஷாலுக்கு மிரட்டல் கடிதம்…

ஐதராபாத்:-விஷால், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. சிவக்குமார்,சந்தானத் துக்கும் இதுபோல் கடிதங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர், நடிகைகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாசர் கூறும் போது,எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோதி இருக்கலாம். சிவக்குமார், விஷால், சந்தானம் போன்றோருக்கும் இது போல் மிரட்டல் விடுத்து மொட்டை கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தேன்.இதனை நான் சும்மா விடப்போவது இல்லை. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் போலீசில் புகார் அளிப்பது குறித்து முடிவு செய்வேன்.இவ்வாறு நாசர் கூறினார்.

செய்திகள், திரையுலகம்

ரஜினி,கமல் படங்கள் திரையிட எதிர்ப்பு…

பெங்களூர்:-தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால் போன்றோரின் படங்கள் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கர்நாடகாவில் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபோல் தெலுங்கு படங்களும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகின்றன. தமிழ், தெலுங்கு டி.வி. தொடர்களும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் நேரடியாக ரிலீசாகும் கன்னட படங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கன்னட திரையுலகினர்கள் எதிர்க்கிறார்கள்.டப்பிங் படங்கள் ஒரிஜினல் கன்னட படங்களைவிட அதிக நாட்கள் ஓடி வசூல் குவிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்னட நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசர கூட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ் குமார், பாரதி, ரவிச்சந்திரன், ஸ்ரீநாத், சசிகபூர், ஜெகேஷ், ஷரண், கவுரவ்கிரன், நடிகைகள் பூஜாகாந்தி, ராதிகா பண்டிட் மற்றும் டி.வி. நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடவும் முடிவு செய்தனர். அதன்படி கன்னட திரையுலகினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புகள் நடக்கவில்லை. ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மைசூர் பேங்க் சர்க்கிள் பகுதியில் இன்று காலை திரண்டனர். அங்கிருந்து மத்திய கல்லூரி மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றார்கள்.அப்போது வேற்று மொழி படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்துக்கு கன்னட சாகித்ய பரிஷத், கன்னட டெவலப்மென்ட் அத்தாரிட்டி, கன்னட கலாசார அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்து உள்ளன. கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

செய்திகள்

25 வயது பெண்ணின் அம்மாவை மனந்த வாலிபர்…

சண்டிகார்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால். வயது 41. அமெரிக்கன் ஸ்டைலில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அட்ரியானா பேஸ்புக்கில் அரியானாவை சேர்ந்த முகேஷ் குமார் என்ற 25 வயது வாலிபரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலிக்கவே, அம்மா வயதுடை 41 வயது கொண்ட அட்ரியானாவை திருமணம் செய்து கொள்ள முகேஷ் சம்மதித்துள்ளார். காதிலில் விழுந்த சில மாதங்களிலே அட்ரியானா, முகேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டார். வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து விவசாய வேலைகளையும் செய்து இந்திய பெண்ணை போன்று ஒரு மனைவியாக வாழ அட்ரியானா உறுதி அளித்து திருமணம் செய்துள்ளார். அமெரிக்காவின் கிளப்பில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அட்ரியானா, அரியானாவில் வீட்டு வேலைகளை செய்து குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் கருத்துகளை பகிர்ந்து கொண்ட இருவரும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இதனை அடுத்து முகேஷ் அட்ரியானாவில் தொலை பேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக அட்ரியானா கூறுகையில், முகேஷ் தனது காதலை போனில் வெளிப்படுத்தியபோது என்னால் ஒன்றும் கூறமுடிவில்லை. எனக்கு சிர்ப்புதான் வந்தது என்று கூறியுள்ளார்.அதனை அடுத்து நாங்கள் சிலவற்றை பேசினோம். நான் முகேஷை தீவிரமாக உணர்ந்தேன். நீ என்னுடைய இதயத்தை வென்றால் திருமணம் குறித்து பரிசீலனை செய்கிறேன். நாங்கள் இரண்டு மூன்று வாரங்களாக பேசினோம். நான் முகேஷுடன் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று விரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.அட்ரியா இது தொடர்பாக மேலும் கூறுகையில், எனது 25 வயது மகள் என்னுடைய நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வந்தார். என்னுடைய நிறைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் என்னுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் பயப்பட்டனர். இந்நிலையில் மெக்சிகோவில் இருந்து குமாருடைய குடும்பத்தினர் அமெரிக்கா வந்தனர். அப்போது நான் முகேஷுடன் இந்தியாவிற்கு வருவதாக கூறினேன். அப்போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.எனது மகள் இந்தியாவில் எனது பாதுகாப்பு குறித்து மிகவும் அழுதார். மேலும், இந்தியா பெண்களுக்கு பாதுக்காப்பற்ற இடம் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த நான் எல்லாம் சரியாகிவிடும் என்று உத்தரவாதம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.பின்னர் இந்தியா வந்து தனது உடையில் இருந்து அனைத்தையும் மாற்றிக் கொண்டு முகேஷை திருமணம் செய்து வாழக்கை நடத்தி வருகிறார். வீட்டு வேலைகள், சமையல், துணி துவைத்தல் மற்றும் விவசாய வேலை என அனைத்தையும் அட்ரியா செய்து வருகிறார்.

Scroll to Top