தமிழ், தெலுங்கு டி.வி. தொடர்களும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் நேரடியாக ரிலீசாகும் கன்னட படங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கன்னட திரையுலகினர்கள் எதிர்க்கிறார்கள்.டப்பிங் படங்கள் ஒரிஜினல் கன்னட படங்களைவிட அதிக நாட்கள் ஓடி வசூல் குவிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்னட நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசர கூட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ் குமார், பாரதி, ரவிச்சந்திரன், ஸ்ரீநாத், சசிகபூர், ஜெகேஷ், ஷரண், கவுரவ்கிரன், நடிகைகள் பூஜாகாந்தி, ராதிகா பண்டிட் மற்றும் டி.வி. நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.
அதன்படி கன்னட திரையுலகினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புகள் நடக்கவில்லை. ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மைசூர் பேங்க் சர்க்கிள் பகுதியில் இன்று காலை திரண்டனர். அங்கிருந்து மத்திய கல்லூரி மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றார்கள்.அப்போது வேற்று மொழி படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்துக்கு கன்னட சாகித்ய பரிஷத், கன்னட டெவலப்மென்ட் அத்தாரிட்டி, கன்னட கலாசார அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்து உள்ளன. கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி