சென்னை:-2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார்.
‘அனேகன்’ என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலவானவன் என்று பொருளாம். அதற்கேற்றார்போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஷ் தோற்றத்துடனும் வருகிறார்.இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். இவருக்கு ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் நடித்திருந்தது போன்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரமாம்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளது இந்நிறுவனம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி