இத்தொடருக்கு முன், இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. முதலிரண்டு போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றதால், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. பின், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியை ‘டை’ செய்த இந்திய அணி, முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 117 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்தது. இதனையடுத்து தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி (117 புள்ளி) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா (110) உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, 109 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடம் பிடிக்க, நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 118 புள்ளிகளுடன் இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ மகுடம் சூடலாம். ஒருவேளை, ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால், 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கும். இரண்டு போட்டியிலும் தோல்வி கண்டால், 115 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி